Monday, December 9, 2013

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்



நன்னிலம் ஒன்றியம் குருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25.11.2013 அன்று காலை 11.00 மணிக்கு பள்ளியின் JRC சார்பில் “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்” பேரணி நடத்தப்பட்டது. பேரணியை பள்ளி கிராமகல்விக்குழு தலைவர் திரு.ஜெகந்நாதன் அவர்கள் முன்னிலை வகிக்க PTA தலைவர் திரு. குருமூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார்கள். SMC, PTA உறுப்பினர்கள் பலரும் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி JRC மாணவர்கள் சிறப்பு சீறுடையில் (V.K.பண்ணை அன்பளிப்பாக வழங்கப்பட்டது) பள்ளியின் வாசலில் தொடங்கி வடக்கு வீதி, கீழவீதி, தெற்குவீதி போன்ற முக்கிய வீதிகள் வழியாக தலைப்பு ஒட்டிய வாசங்களை கோஷங்களாக்கி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களுடன் பிற்பகல் 1.00 மணிக்கு பள்ளியை வந்தடைந்தது. பேரணி தொடக்கதில் JRC ஒருங்கிணைபாளர் திருமதி த.ரெங்கபால் அவர்கள் வரவேற்றும், இறுதியில் தலைமை ஆசிரியை திருமதி சி.மங்களச்செய்தி நன்றியுரையுடனும் பேரணி இனிதே முடிவடைந்தது.


Tuesday, August 27, 2013

வெள்ளாங்கால் பள்ளியில் ஜெ.ஆர்.சி செயல்பாடுகள்



PUMS, Vellangal. JRC Event : Planting saplings on 03.07.2013. Send by JRC Convener T.K.S.Srinivasan. BT. Asst, (English).


திருப்பத்தூர் பள்ளியில் சுதந்திர தினம்

திருத்துறைப்பூண்டி ஒன்றியம், திருப்பத்தூர், ஊ.ஒ.ந.நி.பள்ளியில் இன்று ஆகஸ்டு 15  சுதந்திர தினம் பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அது சமயம் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.




Monday, August 26, 2013

ஜெனிவா ஒப்பந்த நாள்

ஆகஸ்ட் 12 இன்று ஜெனிவா ஒப்பந்த நாள் முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊ.ஒ.ந.நி. பள்ளி வளாகத்தில் ஜுனியர் ரெட் கிராஸ் சார்பாக கொடி ஏற்றப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின் பள்ளியின் ஜெ.ஆர்.சி ஆலோசகர் திரு.சுரேஷ் அவர்கள்  ஜெனிவா ஒப்பந்த நாள் பற்றி ஓர் அறிமுக உரையாற்றி பின் கருத்துரை வழங்கினார்.

கோட்டூர் ஒன்றியம்

கோட்டூர் ஒன்றியத்தில் ஜுனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மன்னார்குடி

மன்னார்குடி ஒன்றியத்தில் ஜுனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குன்னலூர் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் ஊ.ஒ.ந.பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் அன்று ஜுனியர் ரெட் கிராஸ் சார்பாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


உலக சுற்றுசூழல் தினம்

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு திருவாஞ்சியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களால் மரக்கன்று நடப்பட்டது.


நாளிதழில் ஜெஆர்.சி செய்தி

முத்துப்பேட்டையில் 28.06.13 அன்று நடைபெற்ற ஒன்றிய அளவிலான ஜெ.ஆர்.சி ஆலோசகர்களுக்கான பயிற்சி நாளிதழில் செய்தியாக வந்தது.


Wednesday, August 7, 2013

Saturday, July 20, 2013

JRC Counsellors Training Muthupetai Block

28.06.2013 அன்று ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கான பயிற்சி கூட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி வளாகத்தில் முத்துப்பேட்டை வட்டார வளமையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.










Sunday, July 7, 2013

2012 - 13ம் கல்வியாண்டில் பள்ளிகளில் ஜூனியர் ரெட் கிராஸ்-ன் செயல்பாடுகள்


 மரம் நடுவிழா


ஜூனியர் ரெட் கிராஸ்-ன் சார்பில் கடந்த 28.02.2012 அன்று முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வளாகத்தில் ஜூனியர் ரெட் கிராஸ்-ன் ஆலோசகர் தலைமையில் தலைமையாசிரியர் முன்னிலையில் மரம் நடுவிழா சிறப்பாக நடைபெற்றது.



ஆலோசகர்களுக்கான பயிற்சி கூட்டம்

27.06.2013 அன்று ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கான பயிற்சி கூட்டம் திருத்துறைப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருத்துறைப்பூண்டி வட்டார வளமையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி மற்றும் கோட்டூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


 திருத்துறைப்பூண்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர் அவர்கள் சிறப்புரை வழங்கியபோது,

கடந்த 2012-13ம் கல்வி ஆண்டில் கோட்டூர் ஒன்றியத்தில் 
ஜுனியர் ரெட் கிராஸ்-ன் செயல்பாடுகள் என்ற தலைப்பில் 
புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஜுனியர் ரெட் கிராஸ்-ன் திருவாருர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு செந்தில்குமார் அவர்கள்
 திருவாருர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு மா.அழகிரிசாமி அவர்கள் ஜுனியர் ரெட் கிராஸ்-ன் சிறப்பாக பணியாற்றிய ஆலோசகர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை வழங்கினார்.


JRC Counsellors Training Koradachery Block


JRC Counsellors Training Koradachery Block












 

Friday, July 5, 2013

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் JRC செயல்பாடுகள்.


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் JRC செயல்பாடுகள்.