Monday, December 9, 2013

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்



நன்னிலம் ஒன்றியம் குருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25.11.2013 அன்று காலை 11.00 மணிக்கு பள்ளியின் JRC சார்பில் “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்” பேரணி நடத்தப்பட்டது. பேரணியை பள்ளி கிராமகல்விக்குழு தலைவர் திரு.ஜெகந்நாதன் அவர்கள் முன்னிலை வகிக்க PTA தலைவர் திரு. குருமூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார்கள். SMC, PTA உறுப்பினர்கள் பலரும் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி JRC மாணவர்கள் சிறப்பு சீறுடையில் (V.K.பண்ணை அன்பளிப்பாக வழங்கப்பட்டது) பள்ளியின் வாசலில் தொடங்கி வடக்கு வீதி, கீழவீதி, தெற்குவீதி போன்ற முக்கிய வீதிகள் வழியாக தலைப்பு ஒட்டிய வாசங்களை கோஷங்களாக்கி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களுடன் பிற்பகல் 1.00 மணிக்கு பள்ளியை வந்தடைந்தது. பேரணி தொடக்கதில் JRC ஒருங்கிணைபாளர் திருமதி த.ரெங்கபால் அவர்கள் வரவேற்றும், இறுதியில் தலைமை ஆசிரியை திருமதி சி.மங்களச்செய்தி நன்றியுரையுடனும் பேரணி இனிதே முடிவடைந்தது.


No comments:

Post a Comment