பாரத பிரதமரின் தூய்மை இந்தியா தூய்மை பள்ளி திட்டவிழா,
இலவச
மரக்கன்றுகள் வழங்கும் விழா மற்றும் மரம் நடும் விழா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி லயன்ஸ் சங்கம், மன்னார்குடி டெம்பில் சிட்டி லயன்ஸ் சங்கம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய நகரப் பள்ளிகளின் ஜூனியர் ரெட் கிராஸ் சங்கம் (JRC) மற்றும் தொடக்கக் கல்வித்துறை இணைந்து நடத்திய பாரத பிரதமரின் தூய்மை இந்தியா தூய்மை பள்ளி திட்டவிழா, இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா மற்றும் மரம் நடும் விழா 15.10.2014 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் இரண்டாம் தெரு பாரத ஸ்டேட் வங்கி எதிரில் மன்னை மன்னார்குடி லயன்ஸ் சங்கத் தலைவர் ரெங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தை.புகழேந்தி ஜே.இன்பவேணி ஆசிரியச் சான்றோர்கள் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் மாணிக்க ஆசைத்தம்பி, R.கிருஸ்ணமூர்த்தி, அ.முரளி JRC மாவட்ட ஒருங்கிணைப்பாளர் R.செந்தில்குமார் – இணை அமைபாளர் M.உமா சோழபாண்டி ஆசிரியர் மணிவாசகம், கொரடாச்சேரி மணிமாறான் JRC ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் C.சரவணன் – இணை ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா, உள்ளிக்கோட்டை மருத்துவ அலுவலர் தங்கராசு மன்னை மன்னார்குடி லயன்ஸ் சங்கம், மன்னார்குடி டெம்பிள் சிட்டி சங்கம் மற்றும் மன்னார்குடி லயன்ஸ் குடும்பத்துடன் இணைந்த நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வருகை தந்த அனைவரையும் மன்னார்குடி டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்க முடுக்குனர் V.கிருஸ்ணசாமி வரவேற்றார். மனிதநேய மக்கள் மருத்துவர் லயன்ஸ் டாக்டர் C.அசோக்குமார் அவர்கள் தூய்மை இந்தியா தூய்மை பள்ளி திட்ட விழாவை துவக்கி வைத்து உரையாற்றினார். மேலும் லயன் டாக்டர் S.தர்மராஜ் லயன்ஸ் சங்கத்தலைவர் R.ரெங்கராஜ் ஆசிரிய சங்க பொறுப்பாளர்கள் மாணிக்க ஆசைத்தம்பி, R.கிருஸ்ணமூர்த்தி, அ.முரளி JRC மாவட்ட ஒருங்கிணைப்பாளர் R.செந்தில்குமார் மற்றும் லயன்ஸ் குடும்ப முக்கிய நிர்வாகிகள் சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தனர்.
பாரத பிரதமரின் தூய்மை இந்தியா தூய்மை பள்ளி திட்டவிழா பேரணி
மன்னார்குடி மேல இரண்டாம் தெருவில் தொடங்கி காந்தி ரோடு, பந்தலடி, கம்மாளத்தெரு வழியாக
தேசிய தொடக்கப்பள்ளியை வந்தடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி லயன்ஸ் குடும்பம் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சுகாதார துறை அலுவலர்கள், JRC நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்ட JRC மாணவர்கள் உள்ளிக்கோட்டை PHC அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். மேற்கண்ட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் மேல இரண்டாம் தெருவில் நடைபெற்ற மரம் நடும் விழாவிலும் மன்னார்குடி தேசிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி JRC மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மரகன்றுகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக JRC மாணவர்களுக்கு லயன்ஸ் குடும்பம்
சார்பில் உணவு குடிநீர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மேற்கண்டவிழா இனிதே நிறைவுற்றது.