Friday, March 28, 2014

மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா






திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு.கே.பொதுச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. ரெட்கிராஸ் மாவட்ட செயளாளர் திரு.ஜே.வரதராஜன் முன்னிலை வகித்தார். பள்ளித்தாளாளர் திரு.எம்.வடுகநாதன், தலைமையாசிரியர் (பொறுப்பு) திரு.ஜீ.சிவக்குமார், மெட்ரிக்பள்ளி ஜே.ஆர்.சி.பயிற்றுனர் திரு.எ.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.லெ.நிர்மலா அவர்கள் ஜூனியர் ரெட்கிராஸ் இயக்கத்தில் 20 ஆண்டிற்கு மேல் சேவை செய்துவரும் பொதக்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் K.பொதுச்செல்வன் அவர்களுக்கு நற்சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கி பாராட்டினார். ஜே.ஆர்.சி.மாவட்ட அமைப்பாளர் திரு.ஆர்.செந்தில்குமார் அவர்களுக்கு முதல் உதவி விரிவுரைக்கான செயிண்ட் ஜான் ஆம்ப்லன்ஸ் முதல்நிலைச்சான்றிதழை வழங்கினார். மாவட்டத்தை சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நற்சான்றிதழ் வழங்கி திருவாரூர் மாவட்டம் பள்ளி இணைச் செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படுகிறது என்றும், இதனால் மாணவர்கள் வருங்காலங்களில் நற்பண்புமிக்கவர்களகவும் நாட்டின் உயர்பதவிகளில் சேவை செய்ய மனிதநேயம் கொண்டவர்களாக உருவாக்கிட ஜூனியர் ரெட்கிராஸ் போன்ற அமைப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் பேசினார்.
  திருவாரூர், கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், ஆகிய ஒன்றியங்களை சார்ந்த நடுநிலைப்பள்ளி ஜே,ஆர்.சி அமைப்பாளர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். விழாவிற்கு முன்னதாக ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் திரு.ஆர்.செந்தில்குமார், வரவேற்புரையாற்றினார், ஆண்டறிக்கையை குளிக்கரை திருமதி.எம்.விசாலாச்சி வாசித்தார், கொரடாச்சேரி ஒன்றிய அமைப்பாளர் திருமதி.ஜே.ஜெயந்தி தலைமையாசிரியை நன்றி கூறினார், விழா ஏற்பாடுகளை மாவட்ட இணை அமைப்பாளர் திருமதி.எம்.உமா செயற்குழு உறுப்பினர்கள் திரு.எஸ்.உதயக்குமார், ஆர்.மணிவாசகம், ஆலோசகர்கள், எஸ்.வெங்கடகிருஷ்ணன், எஸ்.சிவநேசன், எ.கவிதா, கே.பாலன் ஆகியோர் சிறப்பாக செய்தார்கள்.


       

No comments:

Post a Comment